suresh raina got chance to play twenty over series against south africa

கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் சுரேஷ் ரெய்னா தவித்துவந்தார்.

அதிரடி பேட்டிங், ஸ்பின் பவுலிங், சிறந்த ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறந்து விளங்கிய சுரேஷ் ரெய்னா, யோ-யோ டெஸ்டில் தேர்வாகாததால், இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

அதனால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்தார். அண்மையில், யோ-யோ டெஸ்டில் தேர்வாகினார் ரெய்னா. அதுகுறித்த மகிழ்ச்சியை தனது டுவிட்டர் பக்கத்தில் ரெய்னா பகிர்ந்துகொண்டார்.

ஆனாலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரெய்னாவுக்கு இடம்கிடைக்கவில்லை.

ஆனால், டி20 தொடரில் ரெய்னாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்திய அணியில் விளையாடாத ரெய்னாவுக்கு சர்வதேச போட்டியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.