சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி பெங்களூரு எஃப் சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

பெடரேசன் கோப்பைக்கு பதிலாக சூப்பர் கோப்பை போட்டிகளை அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிமுகம் செய்தது.

இதன் முதல் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் புவனேஸ்வரில் நடைபெற்றது. 

இதில், பெங்களூரு எஃப்சி, மோகன்பகான், ஈஸ்ட்பெங்கால், எஃப்சி கோவா உள்பட பலர அணிகள் கலந்து கொண்டன.

இந்தப் போட்டியின் நேற்று நடந்த இறுதிப் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியும், பெங்களூரு எஃப் சி அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியைய், பெங்களூரு எஃப் சி வென்றது.

இந்த இறுதி சுற்றில் வெற்றிப் பெற்றதன்மூலம் பெங்களூரு எஃப் சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.