Sunil is the best hockey player of the year Award Winning Indian acattiya

ஆசிய வளைகோல் பந்தாட்ட சம்மேளனத்தின் (ஏஎச்எப்) ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் எஸ்.வி.சுனீல் தேர்வு செய்யபட்டுள்ளார்.

அதேபோன்று சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு மற்றொரு இந்தியரான ஹர்மான்பிரீத் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இலண்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா வாகை சூடுவதற்கு எஸ்.வி.சுனீல் பிரதான காரணம்.

ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றதற்கு ஹர்மான்பிரீத் முக்கிய காரணம்.

அதனால் தான் ஆசிய வளைகோல் பந்தாட்ட சம்மேளனத்தின் (ஏஎச்எப்) இந்த விருதிற்காக இவர்களை தேர்ந்தெடுத்து உள்ளது.

இது குறித்து எஸ்.வி.சுனீல் தெரிவித்தது:

'இந்த விருது எனக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்திய ஹாக்கி ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி பெற்று வருவதாக நம்புகிறேன். கடந்த ஆண்டு நாங்கள் மறக்க முடியாத சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் சிறப்பான செயல்பாட்டின் காரணமாகவே இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது. ஹாக்கி இந்தியாவின் முயற்சிக்காக இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றுத் தெரிவித்தார்.