Asianet News TamilAsianet News Tamil

அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறினாரா ஷாருக்கான் ? அமலாக்கத்துறை சம்மன்

summon to sharukkan
summon to sharukkan
Author
First Published Jul 21, 2017, 5:26 AM IST


அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறினாரா ஷாருக்கான் ? அமலாக்கத்துறை சம்மன்

அன்னிய செலவாணி விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றாச்சாட்டு தொடர்பாக ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அன்னிய செலவாணி விதிகளை மீறி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மதிப்பு வேண்டும் என்றே குறைத்து காட்டப்பட்டதாகவும் இதன் காரணமாக அரசுக்கு 73.6 கோடி அளவுக்கு  இழப்பு ஏற்பட்டதாக அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் கேட்டு ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அணி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், ஷாருக்கான் அமலாக்கத்துறை முன் ஆஜராகவில்லை.

இந்நிலையில், விதிமீறல்தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்களிக்குமாறு ஷாருக்கானுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக கோரி சம்மன் அனுப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios