Stefan Konstantin Extension of the Indian Football Team ...
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக ஸ்டீபன் கான்ஸ்டன்டீன் வரும் 2019-ஆம் ஆண்டு வரை நீடிக்கிறார்.
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக வரும் 2019-ஆம் ஆண்டு வரை நீடிப்பது தொடர்பான அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஸ்டீபன் கான்ஸ்டன்டீன் நேற்று கூறினார்.
இதனையடுத்து, இந்திய கால்பந்தில் அதிக காலம் பயிற்சியாளராக தொடரும் பெருமைக்கு ஸ்டீபன் சொந்தக்காரர் ஆகியுள்ளார் ஸ்டீபன் கான்ஸ்டன்டீன்.
அவர் 2002 - 2005 காலகட்டத்திலும், தற்போது 2015 - 2019 காலகட்டத்திலுமாக மொத்தம் 7 ஆண்டுகள் இந்திய அணியில் பயிற்சியாளராகியுள்ளார்.
ஸ்டீபன் பயிற்சியில் இந்திய கால்பந்து அணி 2019 ஏஎஃப்சி ஆசிய கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபரில் அதற்காக நடைபெற்ற தகுதியாட்டத்தில் மக்காவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியாவுக்கு அது தொடர்ச்சியான 12-வது வெற்றி என்பது கூடுதல் தகவல்.
