State-level basketball competition Chennai Satyabhama University team won the trophy ...
மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியில், சென்னையின் சத்யபாமா பல்கலைக்கழக அணி முதலிடத்தைப் பிடித்து கோப்பையை வென்றது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூடைப்பந்துக் கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன.
இதில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், கரூர் டெக்ஸ்சிட்டி அணியும், சென்னை சத்யபாமா பல்கலைக்கழக அணியும் மோதின.
இதன் இறுதியில் சத்யபாமா பல்கலைக்கழக அணி முதலிடத்தைப் பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.
இரண்டாமிடத்தை கரூர் டெக்ஸ்சிட்டி அணியும், மூன்றாமிடத்தை திண்டுக்கல் பிபிசி அணியும், நான்காமிடத்தை பாலக்கோடு கூடைப்பந்துக் கழக அணியும் பெற்றன.
இந்தப் போட்டியில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்டன. தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகத் துணைத் தலைவர் எஸ்ஆர். வெற்றிவேல், ராதா மெட்ரிக். பள்ளித் தாளாளர் மாரியப்பன், தருமபுரி வட்டாட்சியர் அதியமான் உள்ளிட்டோர் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
போட்டியின் நிறைவு நிகழ்ச்சியில், பாலக்கோடு கூடைப்பந்துக் கழகச் செயலர் குணசேகரன் வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கி சிறப்பித்தார்.
