State Junior Hockey Update vakaic given Trichy team karcittatu
மாநில அளவிலான ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டியில் திருச்சி மாவட்ட அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோவை அணியை வீழ்த்தி வாகைச் சூடி கர்சித்தது.
தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில், வேலம்மாள் வேல்ஸ் வித்யாலயா கோப்பைக்கான மாநில அளவிலான ஜீனியர் ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் நடைபெற்றது.
செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைப்பெற்ற இந்தப் போட்டி கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. ஐந்தாவது நாளான நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் கோவை அணி 1-0 என்ற கோல் கணக்கில் மதுரை அணியைத் தோற்கடித்தது.
இரண்டாவது அரையிறுதியில் திருச்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது.
பின்னர், பிற்பகலில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் திருச்சி அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோவை அணியை வீழ்த்தி வாகைச் சூடியது.
மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் சென்னை அணி 5-1 என்ற கோல் கணக்கில் மதுரை அணியை துவம்சம் செய்தது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை தாங்கினார். அர்ஜுனா விருது வென்ற முன்னாள் ஹாக்கி வீரரான வி.ஜே.பிலிப்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற திருச்சி அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
