இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ராம்புக்வெல்லா, சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். 26 வயதான ரமித் இலங்கை அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். 

இலங்கை அணிக்காக இதுவரை 2 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அத்லெடிக் கிளப் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பொதுமக்களுடன் வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களால் இலங்கை போலிசார் ரமித்தை கைது செய்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

ரமித் செய்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

முன்னதாக, 2016-ம் ஆண்டு கார் விபத்து ஏற்படுத்திய குற்றத்துக்காக ரமித் ராம்புக்வெல்லா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2013-ம் ஆண்டு இலங்கை ஏ அணியில் இடம்பிடித்திருந்த ரமித், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற தொடரின் போது சுமார் 35,000 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்தின் கதவை நடுவழியில் திறந்துவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் அவர்மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.