- Home
- Sports
- Sports Cricket
- விஜய் ஹசாரே டிராபியிலும் சூர்யகுமார், சுப்மன் கில் படுமோசமான பேட்டிங்.. ஷ்ரேயாஸ் மாஸ் இன்னிங்ஸ்!
விஜய் ஹசாரே டிராபியிலும் சூர்யகுமார், சுப்மன் கில் படுமோசமான பேட்டிங்.. ஷ்ரேயாஸ் மாஸ் இன்னிங்ஸ்!
இந்திய அணியின் ஒடிஐ கேப்டன் சுப்மன் கில்லும், டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் விஜய் விஜய் ஹசாரே டிராபியிலும் ரன் அடிக்கத் தடுமாறியுள்ளனர். அதே வேளையில் காயத்தில் இருந்து மீண்ட ஷ்ரேயாஸ் ஐயர் சூப்பர் அரை சதம் அடித்தார்.

விஜய் ஹசாரே டிராபியில் ஷ்ரேயாஸ் ஐயர் அசத்தல்
விஜய் ஹசாரே டிராபியில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் காயத்தில் இருந்து குணமடைந்து சிறப்பாக விளையாடியுள்ளார். அதே வேளையில் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொதப்பியுள்ளனர்.
ஜெய்ப்பூரில் ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிரான 33 ஓவர்கள் கொண்ட போட்டியில், 53 பந்துகளில் 82 ரன்கள் குவித்து மும்பை அணியை 299/9 என்ற வலுவான நிலைக்கு கொண்டு சென்றார் அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும்.
சூர்யகுமார் யாதவ் மோசமான பேட்டிங்
ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கால் மும்பை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே வேளையில் இந்திய இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதேபோல் சமீபகாலமாக பார்ம் இன்றி தவிக்கும் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களில் ஆட்டமிழந்து தனது மோசமான பேட்டிங்கை தொடர்ந்தார்.
சுப்மன் கில்லும் ஏமாற்றம்
இதேபோல் அண்மை காலமாக ரன்கள் சேர்க்க திணறி வரும் இந்திய ஓடிஐ அணி கேப்டன் சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது கோவா அணிக்கு எதிராக 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மேலும் டெல்லி அணிக்காக விளையாடிய இந்திய அணி விக்கெட் கீப்பர் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ரயில்வேஸ் அணிக்கு எதிராக 9 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
முகமது ஷமி, முகமது சிராஜ் அசத்தல்
அதே வேளையில் பெங்கால் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் முகமது ஷமி ஹைதராபாத்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஹைதராபாத்துக்காக விளையாடிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணியின் முன்னணி வீரர்களான சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வருவது ரசிகர்களுக்கும், பிசிசிஐக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

