Srikanth and HS Brinay advanced to quarter final in Japan Open

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் உலகின் 8-ஆம் நிலை வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கின் ஹூ யூனுடன் மோதினார்.

இதில், 21-12, 21-11 என்ற நேர் செட்களில் ஹூ யூனை வீழ்த்தினார் ஸ்ரீகாந்த். 

ஸ்ரீகாந்த் தனது காலிறுதியில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்சனை சந்திக்கிறார்.

மற்றொரு 2-வது சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத், சீன தைபேவின் சூ ஜென் ஹாவுடன் மோதினார்.

இதில், 21-16, 23-21 என்ற நேர் செட்களில் சூ ஜென் ஹாவை தோற்கடித்தார் சாய் பிரணீத்.

சாய் பிரணீத் தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஷி யூகியை சந்திக்கிறார்.