Sri Lankan team to face India

கிரிக்கெட் தொடரில் இந்தியாவை எதிர்கொள்ளப் போகும் இலங்கை அணியை அறிவித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.

இந்தியாவை எதிர்கொள்ளப் போகும் தினேஷ் சண்டிமல் தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெறாத ஏஞ்ஜெலோ மேத்யூஸ் இலங்கை அணிக்குத் திரும்பியுள்ளனார்.

அதேசமயம், பேட்ஸ்மேனான குசல் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். 2015-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான குசல் மெண்டிஸ் தொடர்ந்து 22 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய - இலங்கை அணிகள் மூன்று டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள், மூன்று டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோதவுள்ளன. இந்தத் தொடர் வரும் 16-ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.

அறிவிக்கப்பட்ட இலங்கை அணி:

தினேஷ் சண்டிமல் (கேப்டன்), திமுத் கருணாரத்னே, தனஞ்ஜெய டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, ஏஞ்ஜெலோ மேத்யூஸ், லாஹிரு திரிமானி, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், தில்ருவன் பெரேரா, லாஹிரு காமெஜ், லக்ஷன் சன்டகன், விஷ்வா ஃபெர்னான்டோ, டாசன் சனகா, நிரோஷன் டிக்வெல்லா, ரோஷன் சில்வா.