டி20 உலக கோப்பை 2020ம் ஆண்டு நடக்க உள்ளது. சர்வதேச டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் அணிகள், உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுவிடும். 

அந்த வகையில் முதல் 8 இடங்களில் இருக்கும் பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. 

9 மற்றும் 10வது இடங்களில் இருக்கும் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேரடியாக தகுதி பெறவில்லை. இந்த அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளில் ஆட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. ஒரு முறை டி20 உலக கோப்பையை வென்றதுடன், மூன்று முறை இறுதி போட்டி வரை சென்ற முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாதது வியப்பும் சோகமும் கலந்த விஷயம் தான். 

ஆஃப்கானிஸ்தான் அணியே நேரடியாக தகுதி பெற்றுவிட்ட நிலையில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தகுதிச்சுற்று போட்டிகளில் ஆட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.