Sri Lanka 321 runs at the end of the match to take the offering for the first time ...

வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இலங்கை 88 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

வங்கதேசம் – இலங்கை அணிகளுக்கு இடையே இலங்கையின் காலே நகரில் நேற்றுத் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் கருணாரத்னே 30 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். உபுல் தரங்கா வந்தவுடன் 4 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த குசல் மெண்டிஸ் நிலைத்து ஆடி அணியின் ஓட்டங்கள் உயர்த்தினார்.

மறுமுனையில், சண்டிமல் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த குணரத்னே, கருணாரத்னேவுடன் இணைந்து நிலைத்தார். 165 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதம் கடந்தார் மெண்டிஸ்.

உடன் ஆடிய குணரத்னே 86 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து ஆடி வந்த நிலையில் 85 ஓட்டங்களில் டஸ்கின் அகமது பந்துவீச்சில் போல்டானார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் 88 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் எடுத்துள்ளது இலங்கை.

டிக்வெல்லா 14, மெண்டிஸ் 166 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

வங்கதேச தரப்பில், முஸ்டாஃபிஸýர் ரஹீம், டஸ்கின் அகமது, சுபஷிஸ் ராய், மெஹதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.