கடைசி போட்டி முடிந்ததும் ரிங்கில் அமர்ந்து ரசிகர்களை நோக்கி வணங்கினார் ஜான் சீனா. அப்போது "Thank You Cena" என்ற கோஷம் மைதானத்தை அதிர வைத்தது.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு மவுசு இருப்பதுபோல் WWE எனப்படும் மல்யுத்த போட்டிகளுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. குறிப்பாக 90 கிட்ஸ்கள் WWE போட்டிகளுக்கு அடிமையாக கிடந்தனர் என்றே சொல்லலாம். WWE போட்டிகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஏராளமான ஆதர்ச நாயகர்கள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்கவர் தான் ஜான் சீனா.

ஜான் சீனா ஓய்வு

17 முறை உலக சாம்பியன் ஆன ஜான் சீனா, நேற்று வாஷிங்டன் டி.சி.-யில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் "தி ரிங் ஜெனரல்" குன்தரிடம் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பிரியாவிடை கொடுத்தார். மல்யுத்த போட்டிகளில் ஜான் சீனாவின் பயணம் கடந்த 2001ம் ஆண்டு தொடங்கியது. "ரூத்லெஸ் அக்ரெஷன்" யுகத்தில் அறிமுகமான அவர் "You Can't See Me" என்ற கேட்ச்பிரேஸுடன் உலகை ஆளத் தொடங்கினார். 16 முறை WWE சாம்பியன்ஷிப், பல ராயல் ரம்பிள் வெற்றிகள், ரெஸ்டில்மேனியா மெயின் இவெண்ட்கள் என அவரது சாதனைகள் எண்ணற்றவை.

கடைசி போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றம்

இந்த ஆண்டில் கொடி ரோட்ஸை வென்று 17-வது உலக சாம்பியன்ஷிப்பை வென்று ரிக் ஃப்ளேரின் சாதனையை முறியடித்தார். 48 வயதாகி விட்டதால் உடல் ரீதியான சிரமங்கள் உள்ளிட்ட காரணங்கள் ஜான் சீனாவை ஓய்வுக்கு தள்ளியுள்ளன. நேற்றைய கடைசி போட்டியில் ஜான் சீனா குன்தரின் ஸ்லீப்பர் ஹோல்டில் டேப் அவுட் ஆனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

ரசிகர்களை நோக்கி வணங்கிய ஜான் சீனா

இந்த போட்டி முடிந்ததும் ரிங்கில் அமர்ந்து ரசிகர்களை நோக்கி வணங்கினார் ஜான் சீனா. அப்போது "Thank You Cena" என்ற கோஷம் மைதானத்தை அதிர வைத்தது. சில ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் விட்டனர். ஜான் சீனா மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் WWE-உடன் தொடர்பு துண்டிக்கப்படவில்லை. 2030 வரை அவர் WWE அம்பாசடராக, மென்டாராக இருப்பார் என கூறப்படுகிறது.

''இறுதி பிரியாவிடை. நன்றி ஜான் சீனா' என்று மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. WWE மல்யுத்த போட்டிகளில் இனிமேல் எத்தனை வீரர்கள் வரலாம் போகாலாம். ஆனால் நீண்ட காலம் உலகம்