Sri Dinesh cantimal cents escaped the thread
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் சன்டிமல் சதத்தால் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 113.3 ஓவர்களில் 338 ஓட்டங்கள் எடுத்து நூலிழையில் தப்பியது.
இலங்கை தலைநகர் கொழும்பில் வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்று வருகிறது.
இதன் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 83.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணியில் தினேஷ் சன்டிமல் சதமடித்தார்.
300 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 138 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இலங்கை அணி 113.3 ஓவர்களில் 338 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேசம் தரப்பில் மெஹதி ஹசன் மிராஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணியில் தமிம் இக்பால் 49, செளம்ய சர்க்கார் 61, இம்ருள் கயெஸ் 34, சபீர் ரஹ்மான் 42 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 60 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அல்ஹசன் 18, கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் 2 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இலங்கைத் தரப்பில் சன்டாகன் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
