Sportsman pension increased two times...
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், “விளையாட்டுப் போட்டுகளில் பங்குபெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வூதிய தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது .
அதன்படி ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கான ஓய்வீதியம் ரூ. 10 ஆயிரத்தில்லிருந்து ரூ.20 ஆயிரமாகவும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 8000 லிருந்து 16 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது” என்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
