South africa win in the 4th one day match

ஜோகன்னெஸ்பர்கில் நடைபெற்ற 4 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. ஹாட்ரிக் வெற்றி பெற்ற இந்தியா இதில் கோட்டைவிட்டதால் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தற்காலிகமாக இழந்துள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னெஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் (5) ரன்களில் ரபடாவின் பந்து வீச்சில் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவருடன் விளையாடிய ஷிகர் தவான் 18.2வது ஓவரில் அரை சதம் அடித்து அசத்தினார்.



கோஹ்லி (75) 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் ஆட்டமிழந்துள்ளார். இந்த நிலையில், தவான் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்களுடனும், ரஹானே (8) ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஷ்ரேயாஸ் சந்தோஷ் (18), பாண்ட்யா (9), புவனேஷ்குமார் (5) ரன்களில் ஆட்டமிழந்தனர். தோனி (42) மற்றும் குல்தீப் யாதவ் (0) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக 290 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.



அடுத்து தென்ஆப்பிரிக்கா அணி விளையாடிய போது மழையினால் இரு முறை ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி, தென்ஆப்பிரிக்காவிற்கு 28 ஓவரில் 202 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.



202 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 25.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அடுத்து நடைபெறவுள்ள இரண்டு ஒரு நாள் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றால் இந்த தொடரை இந்தியா கைப்பற்றும்.