அடுத்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளப் போகும் தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டூ பிளெஸிஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது. எனவே, அடுத்து நடைபெறும் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற இரண்டு அணிகளும் கடுமையாகப் பயிற்சி செய்து வருகின்றன.

இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு அடுத்த 2 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆலிவியர் என்னும் இளம் ஆல்-ரௌண்டர் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு அனுபவ ஆல்-ரௌண்டரான கிறிஸ் மோரிஸும் இடம்பிடித்துள்ளார்.

அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க அணி விவரம்:

டூ பிளெஸிஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, டெம்போ பவூமா, குயின்டன் டி காக், டி பிரையன், ஏபி டி வில்லியர்ஸ், டீன் எல்கர், ஹென்ரிச் க்ளாஸன், கேசவ் மகாராஜ், ஏய்டன் மர்கராம், மோர்னே மார்கல், வியான் முல்டர், லுங்கி நிகிடி, வெரோன் பிளாண்டர், காகிஸோ ரபாடா, ஆலிவியர், கிறிஸ் மோரிஸ்.