Asianet News TamilAsianet News Tamil

இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது தென் ஆப்பிரிக்கா; ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...

South Africa reacted to India in the second match Wins six wickets
South Africa reacted to India in the second match Wins six wickets
Author
First Published Feb 22, 2018, 11:17 AM IST


இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

மொத்தம் மூன்று ஆட்டங்களைக் கொண்ட இந்த டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கியது இந்தியா. இந்த நிலையில், சென்சுரியனில் 2-வது டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீசத் தீர்மானித்தது. இதையடுத்து, இந்திய வீரர்கள் களம் இறங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா ஜூனியர் டாலாவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி 'டக்' அவுட் ஆனார். இதையடுத்து, ஷிகர் தவன் 14 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டுமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் கோலி வந்த வேகத்தில் கிளாசென்னிடம் கேட்ச் கொடுத்து 1 ஓட்டத்தில் பெவிலியன் திரும்பினார். சுரேஷ் ரெய்னாவுடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினர். எனினும், 11-வது ஓவரில் பெலுக்வாயோ வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் ரெய்னா. அப்போது அவர் 24 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அணியின் ஸ்கோர் 90-ஆக இருந்தது.

இளம் வீரரான மணீஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்தார் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி. இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தங்களது அரை சதத்தைப் பதிவு செய்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 48 பந்துகளில் 79 ஓட்டங்களும், தோனி 28 பந்துகளில் 52 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜே.ஜே.ஸ்மட்ஸ், உனத்கட் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டனி டுமினி களம் இறங்கி ஹென்ரிக்ஸுக்கு தோள் கொடுத்தார். எனினும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹென்ரிக்ஸை வெளியேற்றினார் ஷர்துல்.  அதிரடியாக விளையாடி 69 ஓட்டங்கள் எடுத்த விக்கெட் கீப்பர் கிளாசென் உனத்கட் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்தும், டேவிட் மில்லர் 5 ரன்களில் பாண்டியா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். டுமினி அரை சதம் பதிவு செய்தார்.

பின்னர், 64 ஓட்டங்களுடன் டுமினியும், 16 ஓட்டங்களுடன் பெஹர்தீனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.4 ஓவர்களில் 189 ஓட்டங்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்தத் தொடரின் 3-வது ஆட்டம் கேப் டவுனில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios