south africa first batting in first ODI
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என தென்னாப்பிரிக்காவிடம் இழந்தது.
6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி டர்பன் நகரில் இன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக், ஹாசிம் ஆம்லா ஆகியோர் களமிறங்கி ஆடிவருகின்றனர்.
அஜிங்கிய ரஹானேவுக்கு இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். பெரும்பாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரஹானே, எந்த இடத்திலும் இறங்கி சிறப்பாக ஆடக்கூடியவர். ஆனால், ரோஹித்-தவான் என்ற ஓபனிங் இணை இருந்ததால், ரஹானேவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. ஆனால், மிடில் ஆர்டரிலும் ரஹானே ஜொலிக்கக்கூடியவர் என்பதால், 4 வது இடத்தில் ரஹானே இறங்குகிறார்.
