Soon India will be a strong team - table tennis player confirmed ...

விரைவில் இந்தியா பலமான அணியாக உருவெடுக்கும் என்று டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் கூறியுள்ளார்.

இந்தியாவின் நம்பர் ஒன் டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தா. அதில் அவர் கூறியதாவது:

"வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. முதலாவது காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றது சிறந்த அனுபவமாக உள்ளது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற போதிலும், காமன்வெல்த் போட்டிகள் வேறு வகையில் இருந்தது. 

கடும் சவாலை சந்தித்த நிலையில் பல நுணுக்கங்களை கற்றேன். மூன்று பதக்கங்களை வென்றது பெரிய சாதனையாகும். சுவீடனில் நடக்கவுள்ள உலகப் போட்டிக்கு தயாராக வேண்டியுள்ளது. அது ஒரு கனவாகும்.

சீனா, ஜப்பான், கொரியா, போன்ற பலமான அணிகளை எதிர்கொள்ள வேண்டும். அதில் பதக்கம் வெல்வதையே இலக்காகக் கொண்டு செயல்படுவோம். ஆசியப் போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வேண்டும். 

மகளிர் பிரிவில் மனிகா ஒற்றையர் பிரிவில் சிறப்பாக ஆடினார். டேபிள் டென்னிஸ் தற்போது சரியான திசையில் சென்று வருகிறது. விரைவில் இதில் இந்தியா பலமான அணியாக உருவெடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.