sirukanur ankalamman engineering college won Champion

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான 14-வது மண்டல அளவிலான கபடி போட்டியில், சிறுகனூர் அங்காளம்மன் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு இடையேயான 14-வது மண்டல அளவிலான கபடி போட்டி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19 பொறியியல் கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.

“நாக் அவுட்” முறையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், சிறுகனூர் அங்காளம்மன் கல்லூரி, எம்.ஏ.எம் கல்லூரி, பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி, ரோவர் கல்லூரி அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறின.

இதில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியின் இறுதியில், சிறுகனூர் அங்காளம்மன் கல்லூரி அணியும், பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில், சிறுகனூர் அங்காளம்மன் கல்லூரி அணி வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது.

பெரம்பலூர் சீனிவாசன் கல்லூரி அணி 2-ஆம் இடத்தையும், பெரம்பலூர் ரோவர் கல்லூரி அணி 3-ஆம் இடத்தையும் பிடித்தன.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதன்மையர் பிரேமலதா பரிசு கோப்பைகளை வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், உடற்கல்வி இயக்குநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.