ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், அந்த அணியின் பேட்டிங் வரிசையை சரித்தார் சிராஜ்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், அந்த அணியின் பேட்டிங் வரிசையை சரித்தார் சிராஜ்.
இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையே 2 அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் டெஸ்ட் போட்டி நடக்கிறது. அதில் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி, முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் பேட்டர்சன் முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். பேட்டர்சன் 31 ரன்களில் சிராஜின் வேகத்தில் வீழ்ந்தார். அதன்பிறகு டிராவிஸ் ஹெட்(4), ஹேண்ட்ஸ்கோம்ப்(0), மிட்செல் மார்ஷ்(0) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார் சிராஜ். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் உஸ்மான் கவாஜா நிதானமாக ஆடினார்.

அதன்பிறகு கவாஜாவுடன் ஜோடி சேர்ந்த மார்னஸ், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 114 ரன்களை சேர்த்தது. மார்னஸ் 60 ரன்களில் சிராஜிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து மீண்டும் விக்கெட்டுகள் சரிந்தன. அபாரமாக ஆடி சதமடித்த கவாஜாவையும் 127 ரன்களில் வீழ்த்தினார் சிராஜ்.

சிராஜின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா ஏ அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்ஸில் 19.3 ஓவர்கள் வீசி 59 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் சிராஜ்.
