Singapore Open Super Series Saina did not play in the match
சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக இந்தியாவின் சாய்னா நெவால் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் இன்றுத் தொடங்குகிறது சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டி
இந்த நிலையில் தனது ஆட்டத்தை மேம்படுத்தும் வகையில் தீவிர பயிற்சி மேற்கொள்ளப் போகிறேன் என்றும், அதனால் சிங்கப்பூர் ஓபனில் இருந்து விலகி இருக்கிறேன் என்றும் சாய்னா நெவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
“சிங்கப்பூர் ஓபனில் இருந்து விலகிவிட்டேன். எனது முழங்கால் பகுதியை மேம்படுத்த வேண்டியுள்ளது. மேலும், தீவிர பயிற்சியின் மூலம் அதை மேம்படுத்த முடியும் என நினைக்கிறேன்.
அடுத்ததாக ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் களம் இறங்கவுள்ளேன். அதற்குப் பிறகு இந்தோனேசியா சூப்பர் சீரிஸ், சுதிர்மான் கோப்பை போட்டிகளிலும் விளையாடுவேன்” என்று கூறினார்.
