Silver medal for Indian veteran in gunshots ... Who?
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது இவர் பெறும் ஆறாவது பதக்கம் ஆகும்.
21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.
இதில், துப்பாக்கி சுடுதலில் ஏற்கெனவே இந்தியா தனது முத்திரையை பதித்துள்ள நிலையில் நேற்று நடந்த மகளிர் 50 மீ ரைபிள் பிரிவில் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். தேஜஸ்வினி காமன்வெல்த்தில் பெறும் 6-வது பதக்கம் இது.
இப்பிரிவில் சிங்கப்பூரின் மார்ட்டினா லிண்ட்ஸ் தங்கமும், ஸ்காட்லாந்தின் சீயனோட் வெள்ளியும் வென்றனர்.
