Shubhava a cheater cheater has a lifetime ban - Canada

ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த ஷரபோரா ஒரு ஏமாற்றுக்காரர். அவருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று கனடா வீராங்கனை இயுஜின் தெரிவித்துள்ளார்..

ஸ்டட்கார்ட் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

இதில், ரஷியாவின் மரியா ஷரபோவா - இத்தாலியின் ராபர்டா வின்சியை எதிர்கொண்டார்.

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் ஷரபோவா 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.

இரண்டாவது சுற்றில் சகநாட்டு வீராங்கனையான எகாடெரினா மகரோவாவை எதிர்கொள்கிறார் சரபோவா.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு ஷரபோவா பேசியது:

'டென்னிஸ் போட்டிக்காக மீண்டும் களமிறங்கிய இந்தத் தருணத்தில் மிகச் சிறப்பாக உணர்கிறேன். இந்த சந்தர்ப்பத்துக்காக நீண்ட காலமாக காத்திருந்தேன்' என்றார்.

ஊக்கமருந்து விவகாரத்தில் 15 மாதம் தண்டனை முடிந்து மீண்டும் போட்டிக்குத் திரும்பியுள்ள மரியா ஷரபோவா என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்கமருந்து விவகாரத்தில் 15 மாதம் தண்டனை முடிந்து மீண்டும் போட்டிக்குத் திரும்பியுள்ள மரியா ஷரபோவா மீது வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கனடா வீராங்கனை இயுஜின் பெளசார்டு கூறியுள்ளார்.

மேலும், ஷரபோவா விளையாடுவதற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது சரியல்ல. ஏமாற்றுக்காரரான அவர், வாழ்நாள் முழுவதும் விளையாடுவதற்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது. அவருக்கு அனுமதி அளித்திருப்பது, நியாயமான முறையில் விளையாடி வரும் இதர வீராங்கனைகளுக்கு அநீதி வழங்குவதைப் போன்ற செயலாகும்' என்றும் தெரிவித்தார்.