Shoaib Akhtar:பவுன்ஸர் வீசும்போது பேட்ஸ்மேன் தலையில் பந்து பட வேண்டும் என்பதை விரும்புவேன், பவுன்ஸருக்கு பயந்து பேட்ஸ்மேன் குரங்குபோல் குதிப்பதை ரசிப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது கொரூரமாந ஆசைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

பவுன்ஸர் வீசும்போது பேட்ஸ்மேன் தலையில் பந்து பட வேண்டும் என்பதை விரும்புவேன், பவுன்ஸருக்கு பயந்து பேட்ஸ்மேன் குரங்குபோல் குதிப்பதை ரசிப்பேன் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது கொரூரமாந ஆசைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

உலகக் கிரிக்கெட்டில் அதிவேகமாகப் பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர்களில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் என்றும் நினைவில் வைக்கப்படுவார். பேட்ஸ்மேன்களை திணறவைக்கும் வைக்கும் வகையில் மணிக்கு 150கி.மீ வேகத்தில் பந்துவீசுவார். அதிலும் 150கி.மீ வேகத்தில் யார்கர்கள் வீசி பேட்ஸ்மேன்கள் படும் அவஸ்தையைப் பார்த்து களத்தில் அக்தர் துள்ளிக் குதிப்பார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 161.3கி.மீ வேகத்தில் பந்துவீசி அக்தர் சாதனை படைத்துள்ளார். 2003ம் ஆண்டு உலகக் கோப்பைப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அக்தர் இ்ந்த அதிவேகப் பந்துவீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன் நிக் நைட்டுக்கு வீசினார்.

இந்நிலையில் பேட்ஸ்மேன்கள் பவுன்ஸரில் திணறுவது குறித்தும், வேகப்பந்துவீச்சு குறித்தும் ஷோயப் அக்தர் ஒரு இணையதளத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: 

நான் போட்டியின்போது பவுன்ஸர்கள் வீசுவதைத்தான் அதிகமாக விரும்புவேன். ஏனென்றால் நான் வீசும் பவுன்ஸர்களைப் பார்த்து பேட்ஸ்மேன்கள் குரங்குபோல் க்ரீஸில் குதிக்க வேண்டும், அதை ரசிக்க வேண்டும். இதை நான்பொய்யாகச் சொல்லவில்லை. என்னுடைய வேகப்பந்துவீச்சு பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட்டை பதம்பார்க்க வேண்டும் என்று விரும்புவேன்.

பேட்ஸ்மேன்கள் தலையில்பந்தை தாக்குதவதுதான் வேகப்பந்துவீச்சின் உச்சக்கட்டம், இதை நடத்திக்காட்ட வேண்டும்.
நான் பேட்ஸ்மேன்களின் உடலில் நான்வீசும் பந்துபட்டு அவர்கள் அடிவாங்க வேண்டும் என விரும்புவேன். பேட்ஸ்மேன்கள் கண்ணாடி முன் நின்று உடலில் காயத்தைப் பார்க்கும்போது என்னுடைய நினைவு வர வேண்டும்.

இதயத்துடிப்பு 185க்கு மேல் செல்லும், தலைமுடி பறக்கும், உடலில் ரத்தஓட்டம் அதிகரிக்கும், இவை நடக்காமல் இருந்தால் நல்லபந்துவீச்சாளர் இல்லை. இவ்வாறு நான் வீசும் பந்து பேட்ஸ்மேன்கள் உடலைத் தாக்க வேண்டும். அவர்கள் காயத்தை கண்ணாடியில் பார்க்கும்போது என்னை நினைக்கவேண்டும். இதுதான் உண்மையான அன்பு
இவ்வாறு அக்தர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர் பேட்ஸ்மேன்கள் உடலை நோக்கியோ அல்லது அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் பந்துவீசக்கூடாது என்று ஐசிசி விதிமறை இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பவுன்ஸரில் தலையில் பந்துவீச்சு ஆஸ்திரேலிய வீரர் மறைவுக்குப்பின் பலவேகப்பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்களின் உடலை பாதிக்காவகையில் பந்துவீசுவதில்லை. ஆனால், அக்தரின் இந்த வெளிப்படையான பேச்சு, அவரின் ஆழ்மனதில் இருக்கும் கொரூரத்தையும், எதிரணிவீரர்கள் படும் துன்பத்தை ரசிக்கும் மனோபாவத்தையும் காட்டுகிறது.

46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அக்தர் 178 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 163 ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளை அக்தர் வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் 15 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை அக்தர் சாய்த்துள்ளார்.