இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தின் போது ரைட் டூ மேட்ச் ஆப்சன் மூலம் ஐந்து கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஷிகர் தவானை ஐதராபாத் அணி தக்க வைத்துக் கொண்டது. இதனை அடுத்து ஐதராபாத் அணிக்காக ஷிகர் தவான் ஆடி வந்தார். இந்த நிலையில் திடீரென ஷிகர் தவான் டெல்லி அணிக்கு அடுத்த ஐ.பி.எல்லில் விளையாட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த தகவலை சன் ரைசர்ஸ் ஐதராபாத் உறுதிப்படுத்தியுள்ளது. ஏலத்தின் போது 5 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஷிகர் தவானை வாங்கியதாக சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் ஷிகர் தவான் அந்த தொகை போதாது என்று கூறும் நிலையில் அவருக்கு கூடுதலாக பணம் கொடுப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே தற்போதைய சூழலில் டெல்லி அணிக்கு செல்ல விரும்பும் ஷிகர் தவானை அனுப்பி வைப்பது தான் அவருக்கும் நல்லது அணிக்கும் நல்லது என்று ஐதரபாத் தெரிவித்துள்ளது. எனவே டெல்லி அணியில் இருந்து விஜய் சங்கர், ஷபாஸ் நதீம், அபிஷேக் ஷர்மா ஆகியோரை பெற்றுக் கொண்டு ஷிகர் தவானை அனுப்பி வைப்பதாக சன் ரைசர்ஸ் கூறியுள்ளது. அதாவது ஷிகருக்கு 5 கோடி ரூபாய் கொடுப்பதே அதிகம் என்று சொல்லாமல் சொல்லியுள்ளது சன்ரைசர்ஸ்.