Shenzhen Open Tennis Romanias Simono Haleb progress in quarterfinals
ஷென்ஸென் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
ஷென்ஸென் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி சீனாவின் ஷென்ஹென் நகரில் நடைப்பெற்று வருகிறது.
இந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப், சீனாவின் டுவான் யிங்யிங்கை எதிர்கொண்டார். அதில், 3-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் டுவான் யிங்யிங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் ருமேனியாவின் இரினா கேமிலியா பெகு மற்றும் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா மோதினர்.
இந்த ஆட்டத்தில் இரினா கேமிலியா பெகு 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வீழ்த்தினார்.
மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செக் குடியரசின் காட்டெரினா சினியாக்கோவாவு, சீனாவின் வாங் யஃபானவும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் காட்டெரினா சினியாக்கோவாவு 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வாங் யஃபானை வென்றார்
.
