Shanghai Masters Climax Roger Federer hits champion for the second time

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான ரஃபேல் நடாலை வீழ்த்தி, ரோஜர் ஃபெடரர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். 

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நேற்று நடைபெற்றது.

இதன் இறுதிச் சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் மோதினர்.

இதில், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ரஃபேல் நடாலை வீழ்த்தினார் ரோஜர் ஃபெடரர்.

நடாலுக்கு எதிராக தொடர்ச்சியாக 5-வது வெற்றியைப் பெற்றுள்ளார் ரோஜர் ஃபெடரர்.

இந்த ஆண்டில் மட்டும் 6-வது பட்டம் வென்றிருக்கும் ஃபெடரர் ஒட்டுமொத்தத்தில் வென்ற 94-வது பட்டம் இது. இதன்மூலம் இவான் லென்டிலின் சாதனையை சமன் செய்தார் 
ஃபெடரர். இதுதவிர நடாலுடன் இதுவரை 38 ஆட்டங்களில் மோதியுள்ள ஃபெடரர், 15-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார். 

வெற்றி குறித்து ஃபெடரர் பேசியது:

"இந்த வாரம் கடினமானதாக அமைந்தது. தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் விளையாடுவது என்பது எந்தவொரு வீரருக்குமே உடலளவில் கடினமானதாகும்.

எனினும், இந்த வாரம் முழுவதும் நான் சிறப்பாக ஆடியதாக நினைக்கிறேன். மிகச்சிறப்பாக சர்வீஸ் அடித்ததோடு, சில அற்புதமான ஆட்டங்களை ஆடியிருக்கிறேன்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.