Senior National Patmandan Sindhu and Saina face face to face today ...
சீனியர் தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சாய்னா நெவால் - பி.வி.சிந்துவும், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஸ்ரீகாந்த் - ஹெச்.எஸ்.பிரணாயும் இன்று மோதுகின்றனர்.
சீனியர் தேசிய பாட்மிண்டன் – 82 சாம்பியன்ஷிப் போட்டி மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஒன்றில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்த அனுரா பிரபுதேசாயுடன் மோதினார். அதில், 21-11, 21-10 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்றார்.
மற்றொரு அரையிறுதியில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பி.வி.சிந்து, ருத்விகா ஷிவானியுடன்ம் மோதி 17-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, பட்டம் வெல்லும் இறுதி ஆட்டத்தில் சாய்னா - சிந்து இன்று மோதுகின்றனர்.
இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் 21-16, 21-18 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்-ஐ வீழ்த்தினார்.
மற்றொரு அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஹெச்.எஸ்.பிரணாய் 21-14, 21-17 என்ற செட் கணக்கில் சுபாங்கர் தேசாயை வீழ்த்தினார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சிக்கி ரெட்டி - அஸ்வினி பொன்னப்பா இணை, சன்யோகிதா கோர்படே - பிரஜக்தா சாவந்த் ஜோடியை இறுதி ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.
கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சாத்விக் சாய் ராஜ் - அஸ்வினி பொன்னப்பா இணை போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணையை எதிர்த்து களம் காண்கிறது.
