sehwag revealed how sachin gave instructions to various indian skippers
யார் கேப்டனாக இருந்தாலும், சச்சின் அறிவுரைகளை வழங்குவார் என சேவாக் தெரிவித்துள்ளார்.
சச்சினும் சேவாக்கும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர். அப்போது, பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர். இருவரும் பரஸ்பர உறவு உள்ளிட்ட பல கருத்துகளை பகிர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் சச்சினும் சேவாக்கும் பேசியதன் மூலம் பல தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சேவாக், இந்திய அணியில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கேப்டன்களாக இருந்தவர்களுக்கு கள வியூகங்களில் சச்சின் அளித்த ஆலோசனைகள் குறித்தும் பேசினார். அப்போது, 2011 உலக கோப்பை இறுதி போட்டியில், யுவராஜ் சிங்கிற்கு முன்னதாக தோனி இறங்குமாறு அறிவுறுத்தியது சச்சின் தான் என தெரிவித்தார். சேவாக் கூறிய இந்த தகவல், ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் பேசிய சேவாக், யார் கேப்டனாக இருந்தாலும் சச்சின் அறிவுரை வழங்குவார். அது தாதாவோ(கங்குலி) ராகுலோ தோனியோ, யாராக இருந்தாலும் சச்சின் அறிவுரை வழங்குவார். ஆனால் நேரடியாக கூறமாட்டார்.

ஒரு மெசேஞ்சர் மூலமாகவே கேப்டன்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார். அவர் நேரடியாக தோனியிடம் கூறிய ஒரே ஆலோசனை, யுவராஜுக்கு முன்னதாக தோனியை களமிறங்குமாறு கூறியதுதான் என சேவாக் தெரிவித்தார்.
