இந்திய அணியின் மிகச்சிறந்த மற்றும் மிரட்டலான தொடக்க வீரராக திகழ்ந்தவர் சேவாக். 1999ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சேவாக், 2013ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடினார். 

தொடக்கத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இறங்கிய சேவாக், மிடில் ஆர்டரில் சோபிக்காததால், அவரது திறமையை அறிந்து அவரை தொடக்க வீரராக களமிறக்கினார் முன்னாள் கேப்டன் கங்குலி. தொடக்க வீரராக மிரட்டலான அதிரடியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சேவாக், இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரரானார். 

தனது அதிரடியால் எதிரணிகளை தெறிக்கவிட்டவர் சேவாக். இன்னிங்ஸின் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடி எதிரணிகளை அச்சுறுத்தியவர். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்களும் அடித்த பெருமைக்குரியவர். 

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அதிரடி வீரர்களான டிவில்லியர்ஸ், கெய்ல் ஆகியோருக்கு எல்லாம் பிடித்த வீரர் வீரேந்திர சேவாக். அப்படிப்பட்ட நமது சேவாக், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என்று யாரை கூறியுள்ளார் என்று பாருங்க..

விராட் கோலி, டேவிட் வார்னர், ஜோ ரூட், ரோஹித் சர்மா, வில்லியம்சன் ஆகியோர் சமகால கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள். இவர்களில் நம்பர் 1 யார் என்று கேட்டால், நான் விராட் கோலியைத்தான் சொல்வேன் என்று கூறியுள்ளார் சேவாக்.