Sebastian is on the upswing in the new season cuttings

ஃபார்முலா ஒன்று கார் பந்தயத்தின் புதிய சீசனில் வெற்றிப் பெற்று ஏறுமுகத்தில் இருக்கிறார் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல்.

சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமானது ஃபார்முலா ஒன்று வகை கார் பந்தயம். இந்த ஆண்டுக்கான ஃபார்முலா ஒன்று கார் பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

ஒவ்வொருச் சுற்று பந்தயத்திலும் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே 25, 18, 15, 12, 10, 8, 6, 4, 2, 1 வீதம் புள்ளிகள் வழங்கப்படும்.

20 சுற்று முடிவில் யார் அதிக புள்ளிகளை சேர்த்து இருக்கிறார்களா? அவர்கள் சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்வர்.

இந்த சீசனின் முதல் பந்தயம் ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரி மெல்போர்ன் நகரில் நேற்று அரங்கேறியது. பந்தய தூரம் 302.271 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் மின்னல் வேகத்தில் காரில் சீறிப் பாய்ந்தனர்.

இதில் பெராரி அணியைச் சேர்ந்த, 4 முறை சாம்பியனான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் 1 மணி 24 நிமிடம் 11.672 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.

இதன் மூலம் 25 புள்ளிகளை அடைந்து வெற்றிப் பெற்றார்.

முதல் வரிசையில் இருந்து கிளம்பிய மெர்சிடஸ் அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் செபாஸ்டியன் வெட்டலை விட 9.975 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். அவருக்கு 18 புள்ளிகள் கிடைத்தன.

மெர்சிடஸ் அணியின் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 3-வதாக வந்தார்.

அடுத்தச் சுற்று சீனா கிராண்ட்பிரி ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி ஷாங்காய் நகரில் நடக்கிறது.