இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சில சமயங்களில் தமிழில் ட்வீட் போட்டு தமிழக மக்களை சென்டிமெண்டாக டச் செய்வார்...

ஹர்பஜன் சிங் வட இந்தியர்..அவருக்கு எப்படிடா தமிழ் தெரியும் என பலர் மனதிலும் கேள்வி எழும் அல்லவா ..?

அதற்கெல்லாம் பதில் இதோ.....

அதாவது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் இன்ஜினியரான இவர் தற்போது அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.


இவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் பெரும் ரசிகர் ...சமூகவலைத்தளங்களில் யாராவது ஹர்பஜன் சிங்க் குறித்து  நெகட்டிவாக போஸ்ட் செய்தால்,வரிந்துக் கட்டிக்கொண்டு  ஹர்பஜனுக்கு ஆதராவாக பல இடங்களில் பதிவிடுவார்

ட்விட்டர் மூலம் ஹர்பஜன் சிங்கை பின் தொடர்ந்த சரவணன்,தொடர்ந்து ஹர்பஜன் சிங்குக்கு ஆதரவாக பதிவிட்டு வந்ததை அறிந்த ஹர்பஜன் சிங்க்,தன்னுடைய  மேலாளர் விக்ரம்சிங்கின் தொலைபேசி எண்ணை சரவணனிடம் கொடுத்து அவரை தொடர்புகொள்ளுமாறு கூறியுள்ளார். 

பின்னர் மிகுந்த சந்தோஷத்தில் மிதந்த சரவனணன்,ஹர்பஜன் சிங்கின் மேலாளரை தொடர்பு கொண்டுள்ளார்.அப்போது சரவணன் குறித்த அனைத்து தகவலையும் அறிந்த மேலாளர்,ஹர்பஜனிடம் சொல்ல காலப்போக்கில்,சரவணன் தான் தன்னுடைய நம்பர்1 ரசிகன் என அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்

ஓட்டலில் நடந்த மீட்டிங்

திண்டுக்கல்லில் நடைப்பெற்ற பஞ்சாப் தமிழக அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரச்சொல்லி சரவணனை நேரடியாக சந்தித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
பின்னர் அவருடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்துள்ளார்  சரவணன்...

பொங்கல் வாழ்த்தில் பொங்கவிட்ட சரவணன்

பொங்கல் நாளன்று,சரவணன் ஹர்பஜன் சிங்கிற்கு  தமிழில் பொங்கல் வாழ்த்து அனுப்பி இருந்தார் இந்த வாழ்த்தை தான் ஹர்பஜன் சிங்க் தனது   ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்...வழக்கத்தை விட இந்த தமிழ் ட்வீட் அதிக லைக்ஸ் வாங்கியது...அதனுடைய விளைவுதான் ....." தன்னுடைய நம்பர் 1 ரசிகன் சரவணன் என குறிப்பிட்டு உள்ளார்.