Asianet News TamilAsianet News Tamil

அஷ்வின் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்!! சுழல் மன்னன் சாக்லைன் முஷ்டாக் புகழாரம்

அஷ்வின் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின் பவுலர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் சாக்லைன் முஷ்டாக் புகழ்ந்துள்ளார்.
 

saqlain mushtaq hails ashwin as world class spinner
Author
England, First Published Aug 28, 2018, 5:37 PM IST

அஷ்வின் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின் பவுலர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்பின் பவுலர் சாக்லைன் முஷ்டாக் புகழ்ந்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ஸ்பின் பவுலர் ரவிச்சந்திரன் அஷ்வின், கடந்த 2011ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமானார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டாலும் டெஸ்ட் அணியின் நட்சத்திர பவுலராக அஷ்வின் திகழ்கிறார். 

saqlain mushtaq hails ashwin as world class spinner

61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 324 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஷ்வின் டெஸ்ட் அணியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்குகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக ஆடினார். எனினும் முதல் போட்டியில் மட்டுமே 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்த இரண்டு போட்டிகளில் வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். இடுப்பு வலியால் அவதிப்பட்டு வரும் அஷ்வின், நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகமாக உள்ளது. 

saqlain mushtaq hails ashwin as world class spinner

இந்நிலையில், அஷ்வின் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்பின் பவுலரும் தற்போதைய இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலிங் ஆலோசகருமான சாக்லைன் முஷ்டாக் கருத்து தெரிவித்துள்ளார். அஷ்வின் குறித்து பேசியுள்ள முஷ்டாக், அஷ்வின் இன்று உலகத்தரம் வாய்ந்த ஸ்பின் பவுலர். நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக அஷ்வின் சிறந்த பவுலர், ஆனால் உலகத்தரம் வாய்ந்த பவுலராக ஆகவில்லை என கூறியிருந்தேன். இந்தியாவிற்கு வெளியே ஆடி அனுபவங்களை பெறுவதன் மூலம்தான் சிறந்த பவுலராக முடியும்.

saqlain mushtaq hails ashwin as world class spinner

தற்போது இந்த தொடரில் அஷ்வின் எப்படி பந்துவீசுகிறார் என்பதை நம்மால் பார்க்க முடியும். மிகவும் அருமையாக வீசுகிறார். அவர் பந்தை பிடிப்பது, வீசுவது என அனைத்துமே சிறப்பாக உள்ளது. இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார். அஷ்வின் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் வெவ்வேறு விதமான திட்டங்களை வைத்துள்ளார். அஷ்வின் தற்போது உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார் என முஷ்டாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios