யெச்சியோன் பகுதியில் நடந்து வரும் ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஒட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனா சாண்டிலா தங்கம் வென்றுள்ளார்.

தென் கொரியாவில் உள்ள யெச்சியோன் பகுதியில ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்திய இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி வருகின்றனர். இதில், பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் 53.31 வினாடிகளில் ஓடி இந்தியாவின் ஹீனா மல்லிக் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். இதே போன்று ஆண்களுக்கான வட்டி எறிதல் போட்டியில் பாரத்ப்ரீத் சிங் 55.66 மீ எறிந்து இந்தியாவிற்கு 2ஆவது தங்கம் வென்றார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் IND vs AUS, முதல் முறையாக சாம்பியன்ஸ் வெல்லப் போவது யார்?

பெண்களுக்கான 5000 மீ தடகளப் இந்தியாவின் அந்திமா பால் வெண்கலம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் இந்தியா பெற்ற முதல் பதக்கம் இதுவாகும். அவர் 17:17.11 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். புஷ்ரா கான் கௌரி 18:15.98 வினாடிகளில் கடந்து 5ஆவது இடன் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற யோனேசவா நானகா மற்றும் மட்சுமோட்டோ அகாரி ஆகியோர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் சோப்ராவின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடமில்லை!ஆகாஷ் சோப்ராவின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்கு இடமில்லை!

நேற்று நடந்த டெகாத்லான் பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதே போன்று பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் தமன்னா, அக்‌ஷயா, நயனா, அபினய் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர். மற்றொரு போட்டியில் 3000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்தியாவின் புஷ்ரா கான் வெள்ளி வென்றுள்ளார். 

50ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா: ஓவலில் சதம் அடித்த சாதனை மன்னன்!50ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா: ஓவலில் சதம் அடித்த சாதனை மன்னன்!

இந்த நிலையில், இன்று நடந்த பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனா சாண்டிலா தங்கம் வென்றார். இதே போன்று ஆண்கள் பிரிவில் 1500 மீட்டர் போட்டியில் ஹசன் வெண்கலம் வென்றுள்ளார். ஆசிய அண்டர்20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என்று மொத்தமாக 8 பதக்கங்கள் வென்றுள்ளது. தற்போது வரையில் இந்தியா தான் அதிக பதக்கங்கள் வென்றுள்ளது.

Scroll to load tweet…

Scroll to load tweet…