இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 11 பேர் கொண்ட இந்திய அணியை கணித்துள்ளார்.

ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்தப் போட்டியை காணலாம். ஐபிஎல் 16ஆவது சீசனை முடித்த கையோடு இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.

50ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா: ஓவலில் சதம் அடித்த சாதனை மன்னன்!

கடந்த முறை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்தப் போட்டியில் எப்படியும் ஐசிசி சாம்பியன் டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கிலாந்து சூழல் ஆஸ்திரேலிய அணிக்கு தான் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ind vs Aus, WTC 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடக்க காரணம்?

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்தியா பிளேயிங் 11 குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இதில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவில்லை.

ஓவல் மைதானத்தில் இந்தியா அண்ட் ஆஸ்திரேலியா படைத்த சாதனைகள்!

  1. ரோகித் சர்மா
  2. சுப்மன் கில்
  3. சட்டேஷ்வர் புஜாரா
  4. விராட் கோலி
  5. அஜிங்கியா ரஹானே
  6. ரவீந்திர ஜடேஜா
  7. கேஎஸ் பரத்
  8. ஷர்துல் தாக்கூர்
  9. முகமது ஷமி
  10. முகமது சிராஜ்
  11. உமேஷ் யாதவ்

பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் வித்தகரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் அளிக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் அஸ்வின். அவர் இந்தப் போட்டியில் இடம் பெறுவாரா? இல்லையா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Scroll to load tweet…

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் எத்தனை மணிக்கு ஆரம்பம்? எந்த சேனலில் பார்க்கலாம்? இன்னிங்ஸ் எப்போ முடியும்?