இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் எத்தனை மணிக்கு ஆரம்பம்? எந்த சேனலில் பார்க்கலாம்? இன்னிங்ஸ் எப்போ முடியும்?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஷிப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் மணிக்கு இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியின் மூலமாக தொடர்ந்து இந்தியா 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
WTC Final: India vs Australia - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இந்தியா கடந்து வந்த பாதை!
முதல் முறையாக 2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முதல் முறையாக தகுதி பெறுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த முதல் உல்க டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
WTC Finalல் தோற்றாலும் கவலையில்லை, இதுவரையில் வந்ததே பெருசு: ராகுல் டிராவிட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் போட்டிகளில் நடந்த 6 தொடர்களில் இந்தியா 10 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியாவில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வென்ற இந்திய அணி வெளிநாட்டில் நடந்த தொடரில் ஒரு தோல்வியும், 1 டிராவையும் சந்தித்தது.
பயிற்சியின் போது ரோகித் சர்மா காயம்: கையில் பேண்டேஜ் போட்டுக் கொண்டு மீண்டும் பயிற்சி!
இங்கிலாந்து தொடரை இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது. எனினும், அந்த தொடரை வெல்ல முடியவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இந்தியா 1-0 என்று முன்னிலையில் இருந்தும் கடைசியாக 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் காலகட்டத்தில் இந்தியா 18 போட்டிகளில் விளையாடியது, இதில் அதிக முறை கேப்டனாக இருந்தவர்கள்
விராட் கோலி – 7
ரோகித் சர்மா -6
கேஎல் ராகுல் – 3
அஜிங்க்யா ரஹானே – 1
ஜஸ்ப்ரித் பும்ரா – 1
உமேஷ் யாதவ்வா? அஸ்வினா? என்ன பிளான்? இந்தியா பிளேயிங் 11!
இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக பார்க்கலாம். அதுமட்டுமின்றி பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் முதல் செஷனும், 5.40 மணி முதல் இரவு 7.40 மணி வரையில் 2ஆவது செஷனும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையில் 3ஆவது செஷனும் நடக்க இருக்கிறது.