ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், பெண்கள் பாட்மின்டன் ஒற்றையர்  போட்டியில் வி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.  முன்னதாக அரையிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டியை 21-14, 18-21, 21-17 என, வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 10-வது நாளாக ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் குவித்து வருகின்றனர். 

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 8 தங்கப்பதக்கம் கைப்பற்றியது. மேரிகோம், நீரஜ் சோப்ரா, மனிகா பத்ரா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.

இந்தியா 25 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளிப் பதங்கங்கள் மற்றும் 18 வெண்கலப் பதங்கங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பெண்கள் பாட்மின்டன் ஒற்றையர்  போட்டியில் வி.வி.சிந்துவை வீழ்த்தி சாய்னா நேவால் தங்கப்பதக்கம் வென்றார்.  முன்னதாக அரையிறுதியில் இந்தியாவின் செய்னா நேவல், ஸ்காட்லாந்தின் கிறிஸ்டியை 21-14, 18-21, 21-17 என, வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சிந்து, கனடாவின் மிட்செல்லியை 21-18, 21-8 என, வீழ்த்தினார். இன்று நடந்த பைனலில் செய்னா, சிந்து பலப்பரீட்சை நடத்தினர். இதில் சாய்னா தங்கம் வென்றார். சிந்து வெள்ளி வென்றார்.