Sai Pranith advanced to the next round in badminton

தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாய் பிரணீத் காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்

தாய்லாந்து ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் மற்றும் மலேசியாவின் இஸ்கந்தர் ஜல்கர்னைன் மோதினர்.

இதில், 21-13, 21-18 என்ற நேர் செட்களில் இஸ்கந்தர் ஜல்கர்னைனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் சாய் பிரனீத்.

போட்டித் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் தனது காலிறுதியில் தாய்லாந்தின் கன்டப்பான் வாங்சரேனுடன் மோதுகிறார்.