Asianet News TamilAsianet News Tamil

சச்சின் எடுத்த அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

ஐ.எஸ்.எஸ் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்த சச்சின் டெண்டுல்கர், பங்குகளை விற்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
sachin tendulkar likely to sell his share in kerala blasters team
Author
India, First Published Sep 16, 2018, 2:14 PM IST

ஐ.எஸ்.எஸ் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்த சச்சின் டெண்டுல்கர், பங்குகளை விற்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், கால்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கிரிக்கெட்டில் ஐபிஎல் ஆடுவதுபோல், கால்பந்துக்கு இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்) என்ற தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கால்பந்து தொடர் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. முதல் சீசனில் 8 அணிகள் ஆடின. தற்போது 10 அணிகள் உள்ளன. 

sachin tendulkar likely to sell his share in kerala blasters team

இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இருந்துவந்தார். கடந்த 2014ம் ஆண்டு முதல் இவரும் உரிமையாளர்களில் ஒருவராக இருந்துவந்தார். இவருடன், கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருக்கின்றனர். 

sachin tendulkar likely to sell his share in kerala blasters team

சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு, அணியை ஊக்கப்படுத்தி வந்தார். அடுத்த சீசன் தொடங்க உள்ள நிலையில், திடீரென அந்த அணியின் பங்குகளை விற்பனை செய்ய சச்சின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சச்சின் டெண்டுல்கரின் இந்த முடிவு, ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  
 
Follow Us:
Download App:
  • android
  • ios