சிறு குழந்தைகள் முதல், இளைஞர்கள் வரை பலருக்கும் விருப்பம்மான விளையாட்டுகளில் ஒன்று 'கிரிக்கெட்'. ஆண்கள் மட்டும் அல்ல பல பெண்களுக்கும் கூட கிரிக்கெட் தான் அவர்களின் விருப்பமான விளையாட்டு என்று கூறலாம். 

இப்படி கிரிக்கெட் விளையாட்டை பிடித்த அனைவருக்கும் பிடித்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான் என்று கூட இவரை புகழலாம். 

இவர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு மும்பை சாலையில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சில இளைங்ஞர்கள் தெரு ஓரமாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்களை பார்த்ததும் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கிய சச்சின் அவர்களுடன் சில நிமிடம் கிரிக்கெட் விளையாடினார். சச்சின் விளையாடுவதை பார்த்த பலர் தங்களுடைய கார்களை நிறுத்துவிட்டு அவருடன் புகைப்படம் எடுக்க முற்பட்டனர். பின் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றுள்ளார் சச்சின். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது