royal challengers bangalore got two tamil players

11வது சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் இரண்டு தமிழக வீரர்களை பெங்களூரு அணி எடுத்துள்ளது.

11வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 7 இந்திய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இதில், எதிர்பாராத விதமாக முரளி விஜய், எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. ஆனால், சென்னையின் செல்லப்பிள்ளையான ரவிச்சந்திரன் அஷ்வினை 7.6 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி எடுத்தது. எதிர்பார்த்ததை விட அதிகவிலைக்கு அஷ்வின் எடுக்கப்பட்டதால், ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி அவரை சென்னை அணி தக்கவைக்கவில்லை.

அவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது.

கடந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடிய தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கு பெங்களூரு அணி எடுத்தது. வாஷிங்டன் சுந்தரை எடுக்க பஞ்சாப் மற்றும் பெங்கள்ளூரு அணிகள் ஆர்வம் காட்டின. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், பெங்களூரு அணி வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கு வாங்கியது.

அதேபோல, மற்றொரு தமிழக வீரரான முருகன் அஷ்வினை எடுக்கவும் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் கடுமையாக போட்டி போட்டன. முருகனையும் பெங்களூரு அணியே எடுத்தது. முருகனை ரூ.2.2கோடிக்கு பெங்களூரு அணி எடுத்தது. 

இளம் தமிழக வீரர்களை எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டாத நிலையில், தமிழக வீரர்களுக்கு பஞ்சாபும் பெங்களூருவும் முக்கியத்துவம் கொடுத்தன.