Rohit Sharma upset with silly mistakes after Mumbai Indians loss vs RCB

மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் அனுஷ்கா சர்மா உற்சாகமாக காணப்பட்டார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியின் போது மும்பை-பெங்களூரு அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே ஒரு முக்கியமான போட்டி என்பதால், பரபரப்பாக சென்ற போட்டியில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களின் மனைவிகள் தங்கள் கணவர்கள் விளையாடுவதை பார்க்க மைதானத்திற்கு வருகை தருகின்றனர்.

அந்த வகையில் சென்னை வீரர் டோனியின் மனைவி ஷாக்சி, மும்பை வீரர் ரோகித்தின் மனைவி ரித்திகா கோஹ்லி மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் அவுஸ்திரேலியா வீரர் வாட்சன் மனைவி என அனைவரும் தங்கள் கணவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டியின் போது ரோகித் சர்மா வந்தவுடனே முதல் பந்திலே உமேஷ் யாதவ் பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார். அப்போது கோஹ்லியின் மனைவி அனுஷ்கா எழுந்து கை தட்டினார், அதுவே ரோகித்தின் மனைவி மிகவும் கவலையாக காணப்பட்டார்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…