ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 7 ரன்களில் வெளியேறினார். இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. அதனால் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய இயலவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரோஹித் சர்மா சில சாதனைகளை செய்யும் வாய்ப்பு இருந்தது. ஆனால் முதல் போட்டியில் அவர் 7 ரன்களில் வெளியேறினார். இரண்டாவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. அதனால் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய இயலவில்லை.
எனவே நாளை சிட்னியில் நடக்கும் கடைசி டி20 போட்டியில் ரோஹித் அந்த சாதனைகளை செய்வாரா என்று பார்ப்போம்.
1. ரோஹித் சர்மா 2018 காலண்டர் ஆண்டில் டி20 போட்டிகளில் 567 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் 33 ரன்கள் எடுத்தால், இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் 600 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். ரோஹித்தின் பேட்டிங் பார்ட்னர் தவான் 648 ரன்களுடன் இந்த ஆண்டில் டி20யில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை ஒரு ஆண்டில் 600 ரன்களை குவித்த இரண்டே வீரர்கள் கோலியும் தவானும்தான். ரோஹித் 33 ரன்களை கடக்கும் பட்சத்தில் அந்த பட்டியலில் ரோஹித் இணைவார். கோலி 2016ம் ஆண்டு 641 ரன்களை குவித்துள்ளார். இந்த சாதனையை செய்ய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாளைய கடைசி டி20 போட்டிதான் ரோஹித்துக்கு கடைசி வாய்ப்பு. ஏனெனில் இந்த ஆண்டில் நாளைய போட்டிதான் கடைசி டி20 போட்டி.
2. சிக்ஸர்கள் அடிப்பதில் வல்லவரான ரோஹித் சர்மா, இன்னும் 4 சிக்ஸர்கள் அடித்தால் டி20 போட்டியில் 100 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை படைப்பார்.
3. சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் 2214 ரன்களுடன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். 2271 ரன்களுடன் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் முதலிடத்தில் உள்ளார். எனவே மார்டின் கப்டிலை முந்தி முதலிடத்தை பிடிக்க ரோஹித்துக்கு இன்னும் 58 ரன்கள் மட்டுமே தேவை.
4. சர்வதேச அளவில் மகளிர் கிரிக்கெட்டையும் உள்ளடக்கிய விதத்தில் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வீரர் - வீராங்கனைகள் பட்டியலில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ரோஹித்தை விட 10 ரன்கள் அதிகமாக உள்ளார். எனவே 11 ரன்கள் அடித்தால் மிதாலி ராஜை பின்னுக்குத்தள்ளி அதிலும் முதலிடம் பிடிப்பார் ரோஹித்.
நாளைய போட்டியில் ரோஹித் சர்மா இந்த சாதனைகளை நிகழ்த்துவாரா என்று பார்ப்போம்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 24, 2018, 4:34 PM IST