Asianet News TamilAsianet News Tamil

தனி ஒருவனாக இலக்கை விரட்டும் ரோஹித் சர்மா அபார சதம்!! தினேஷ் கார்த்திக்கும் காலி.. செம திரில்லான மேட்ச்

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ரோஹித் சர்மா, சதம் விளாசினார். 

rohit sharma hits century and single handedly chasing the target set by australia
Author
Australia, First Published Jan 12, 2019, 3:14 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, நான்காவது ஓவரில் கோலியும் ராயுடுவும் ரிச்சர்ட்ஸனின் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 4வது ஓவரிலேயே களத்துக்கு வந்தார் தோனி. 

ரோஹித் - தோனி கூட்டணி நிலைத்து ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 13 ஓவர் வரை நிதானமாக ஆடிய இருவரும் பிறகு சில ஷாட்களை அடித்து ஆடினர். இருவரும் பொறுப்பாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 137 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியும் அரைசதம் கடந்தார். 

rohit sharma hits century and single handedly chasing the target set by australia

ஆனால் அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே 51 ரன்னில் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக பவுலர் ஜேசன் பெஹ்ரண்ட்ரோஃபிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் தோனி. பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், ரிச்சர்ட்ஸனின் பந்தில் போல்டாகி 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ரோஹித் சர்மா, சதம் விளாசினார். ரோஹித்துடன் ஜடேஜா சேர்ந்து ஆடிவருகிறார். கடும் நெருக்கடியான போட்டியில் தனி ஒருவனாக போராடிவருகிறார் ரோஹித் சர்மா போராடிவருகிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios