வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் சதமடித்த ரோஹித் சர்மா பல சாதனைகளை குவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டி20 தொடரை வென்றது. இந்த போட்டியில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை குவித்த ரோஹித் ச்ரமா, மூன்று கேட்ச்களையும் பிடித்த ரோஹித் சர்மா, பல சாதனைகளை குவித்தார்.

1. ஒரே டி20 போட்டியில் சதம் மற்றும் மூன்று கேட்ச்கள், ஒரே ஒருநாள் போட்டியில் 150 ரன்களுக்கு அதிகமாகவும் 3 கேட்ச்களையும் பிடித்த ஒரே வீரர் ரோஹித் சர்மா தான்.

2. நேற்று ரோஹித் அடித்த சதம் டி20 போட்டியில் அவரது 4வது சதம். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

3. டி20 போட்டியில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, மூன்றாவது இடத்தையும் யுவராஜ் சிங்குடன் பகிர்ந்துள்ளார். 10 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, 7 சிக்ஸர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார்.

4. முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் தவானும் இணைந்து 123 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிகமுறை 100 விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் பங்கெடுத்த வீரர் என்ற சாதனையை ரோஹித் படைத்துள்ளார். ரோஹித் சர்மா 8 முறை 100 ரன்களுக்கு மேல் குவித்த பார்ட்னர்ஷிப்பில் இடம்பிடித்துள்ளார்.