Returns to Chennai Super Kings Prepare to put whistle on CK ...
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு விளையாட வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எம்.எஸ்.தோனி திரும்புவது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் சீசனில் ஒரு அணி, தன்னிடம் இருக்கும் வீரர்களில் 5 பேரை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்வதற்கு ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு எடுத்துள்ளது.
இது, தடைக்காலம் முடிந்து 2018-ஆம் ஆண்டு சீசனில் போட்டிக்குத் திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த 2015-ஆம் ஆண்டில் தங்கள் வசம் இருந்த வீரர்களை ஏலமின்றி தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த அணிகளைச் சேர்ந்த வீரர்கள், புதிதாக போட்டியில் சேர்க்கப்பட்ட ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டிக்கான ஊதிய பட்ஜெட் மற்றும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான கட்டண விவகாரங்களிலும் நிர்வாகக் குழு திருத்தம் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, சென்னையில் சூப்பர் கிங்ஸில் விளையாடிவந்த எம்.எஸ்.தோனி தற்போது மீண்டும் அணிக்கு திரும்பும் வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
