rashid khan exciting indians support and love that he get
ஐபிஎல் போட்டிகளில் ஆடும்போது ஆஃப்கானிஸ்தானில் ஆடுவதைப்போல உணர்வதாக ஹைதராபாத் அணி வீரர் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் சிறந்த பவுலிங் அணியாக ஹைதராபாத் அணி திகழ்கிறது. 9 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி, 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மிக குறைந்த ரன்னை கூட எடுக்க விடாமல் எதிரணியை சுருட்டுவதில் ஹைதராபாத் சிறந்து விளங்குகிறது.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷீத் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி அணிக்கு பேசிய ரஷீத் கான், நன்றாக பந்து வீசியதும் இந்த இளம் வயதில் 100 போட்டிகள் ஆடியதும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆஃப்கானிஸ்தானில் விளையாடுவதை போல உணர்கிறேன். இரண்டு ஆண்டுகளாக எனக்கு கிடைக்கும் ஆதரவும் அன்பும் அற்புதமானது. அது எனக்கு உத்வேகத்தை அளிக்கிறது என ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் திகழ்கிறார். கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடிய ரஷீத் கானை இந்த ஐபிஎல் தொடரிலும் அந்த அணி தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.
